Publish Date: Mon, 24 Nov 2008 (17:22 IST)
Updated Date: Mon, 24 Nov 2008 (17:00 IST)
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தற்கொலைப் படையை சேர்ந்த பெண் ஒருவர் நடத்திய தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் காயமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பாக்தாத்தில் பாதுகாப்பு அதிகம் உள்ள கிரீன் ஸோன் (Green Zone) பகுதியில் இன்று காலை இத்தாக்குதல் நடந்துள்ளது. அப்பகுதிக்கு அருகிலேயே ஈராக் நாடாளுமன்றம் மற்றும் பல அரசு அலுவலகங்கள், அயல்நாட்டு தூதரகங்கள் உள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக ஈராக்கின் பாதுகாப்புப் பணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டாலும், குண்டுவெடிப்பு, தற்கொலைப்படைத் தாக்குதல்கள் அடிக்கடி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.