Publish Date: Sat, 22 Nov 2008 (18:10 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (17:10 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் அல் காய்டா இயக்கத்தின் முக்கிய பயங்கரவாதி ரஷீத் ராஃப் கொல்லப்பட்டுள்ளார்.
இவர் அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களில் தொடர்புடையவர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பழங்குடியினர் கிராமங்களில் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் நேற்று ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
ஆஃப்கானிஸ்தானில் பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டுள்ள அமெரிக்கப் படையினர் நடத்தியதாகக் கருதப்படும் இந்தத் தாக்குதலில் சர்வதேசப் பயங்கரவாத இயக்கமான அல் காய்டாவைச் சேர்ந்த பயங்கரவாதி ரஷீத் ராஃப் மற்றும் அவரது உதவியாளர் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மீது நடத்தப்பட்ட விமானத் தாக்குதல், இங்கிலாந்தில் நடந்துள்ள தாக்குதல்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ரஷீத்திற்குத் தொடர்புள்ளது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Sat, 22 Nov 2008 (18:10 IST)
Updated Date: Sat, 22 Nov 2008 (17:10 IST)