Publish Date: Fri, 21 Nov 2008 (18:29 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (18:29 IST)
பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் ஷியா முஸ்லிம் பிரிவினர் நடத்திய இறுதிச்சடங்கில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து அப்பகுதியில் இருந்த ஒரு கும்பல் வானத்தை நோக்கித் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், அப்பகுதியில் இருந்த வாகனங்களை தீயிட்டுக் கொழுத்தி அதிருப்தியை வெளிப்படுத்தியது. அவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர்.
நேற்றிரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் காயமடைந்த 28 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.