Publish Date: Fri, 21 Nov 2008 (14:41 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (14:41 IST)
உலகப் புகழ்பெற்ற பிரபல பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் இஸ்லாமியராக மதம் மாறியுள்ளார். மேலும் தனது பெயரை `மிக்காயில்' என்றும் மாற்றிக் கொண்டுள்ளார்.
50 வயதான மைக்கேல் ஜாக்சன், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது நண்பரின் விடுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், இஸ்லாமிய மதத்திற்கு மாறியதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிகழ்ச்சியில் ஜாக்சன் சிறிதாக ஒரு தொப்பியையும் அணிந்து காணப்பட்டார்.
அரேபிய ஷேக் ஒருவர், ஜாக்சனுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜராகவிருக்கும் நிலையில், மைக்கேல் ஜாக்சன் மதம் மாறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தனது நண்பரிரின் வீட்டில் பாடல் பதிவு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, முஸ்லிம் மதத்திற்கு மாறுவது என்ற முடிவை அவர் எடுத்ததாகக் குறிப்பிட்டார். அதன் அடிப்படையிலேயே தான் மதம் மாறியிருப்பதாக ஜாக்சன் கூறினார்.
மிக்காயில் என்பது அல்லாவின் தேவதைகளில் ஒருவரின் பெயர் என்று கூறப்படுகிறது.
முஸ்தபா என்ற பெயரை பரிந்துரைத்த போது அதனை ஜாக்சன் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
Webdunia
Publish Date: Fri, 21 Nov 2008 (14:41 IST)
Updated Date: Fri, 21 Nov 2008 (14:41 IST)