பாகிஸ்தான்-ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ) இடையிலான இருதரப்பு உறவுகள் குறித்தும், மண்டல மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்தும் அந்நாட்டுத் தலைவர்களுடன் விவாதிக்க பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி அடுத்த வாரம் யு.ஏ.இ. செல்ல உள்ளார்.
வரும் 24ஆம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் தொடரும் இப்பயணத்தின் போது யு.ஏ.இ. அதிபரை சந்தித்து சர்தாரி பேசுவார் என பாகிஸ்தான் அயலுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் முகம்மது சாதிக் நேற்று இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், இப்பயணத்தின் போது யு.ஏ.இ. துணை அதிபர்/பிரதமர், துபாய் அரசர், அபுதுபாய் இளவரசர் ஆகியோரையும் சர்தாரி சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
யு.ஏ.இ. உடனான உறவை மேம்படுத்தவும், ஆக்கப்பூர்வமான பொருளாதார கூட்டணியை ஏற்படுத்தவும் ஆசிப் அலி சர்தாரி இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளதாகவும் சாதிக் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.