சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சாலைச் சுரங்கப்பாதை இடிந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
அந்நாட்டின் ஹங்சோவா நகரில் கட்டப்பட்டு அந்த சாலைச் சுரங்கப்பாதை கடந்த சனியன்று இடிந்து விழுந்தது. சுரங்கம் இடிந்த போது ஒரு பேருந்து உட்பட 11 வாகனங்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டன.
விபத்து நடந்த தினத்தன்று 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சுரங்கத்தில் சிக்கிய மேலும் 13 பேரை மீட்க கடந்த 3 நாட்களாக நடந்த மீட்புப் பணிகள் தோல்வியில் முடிந்ததால், பலி எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாத காரணத்தால், அங்கு ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சுரங்கம், தொழிற்சாலை மற்றும் கட்டுமானப் பணிகளில் ஏற்படும் விபத்துகளில் சிக்கி உயிரிழக்கின்றனர்.