விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த மாங்குளம், பணிச்சங்கேணி பகுதிகளை சிறிலங்க ராணுவம் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது!
இதுகுறித்து சிறிலங்க பாதுகாப்பு அமைச்சகப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல கூறுகையில், கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நடந்த கடும் மோதலிற்குப் பிறகு ஏ-9 முக்கிய சாலை வழியாக ராணுவத்தினர் மாங்குளம் பகுதியை கைப்பற்றியுள்ளதாகவும், ஒட்டிச்சுட்டான் பகுதிக்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
மாங்குளம் கைப்பற்றப்பட்டுள்ளதையடுத்து விடுதலைப் புலிகளுக்கான முக்கிய வழங்கல் பாதை தடைபட்டுள்ளதாகவும் அமைச்சர் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளார்.
இதற்கிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குமிழமுனை கிராமத்தை ராணுவத்தினர் கைப்பற்றியுள்ளதாக ராணுவ பேச்சாளர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.