அமெரிக்காவில் தனது தலைமையின் கீழ் அமையும் புதிய அமைச்சரவையில், எதிர்க்ட்சியைச் (குடியரசு) சேர்ந்த ஒரு சிலருக்கும் பொறுப்பு அளிக்கப்படும் என அந்நாட்டின் 44வது அதிபராக பராக் ஒபாமா அறிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்காவின் புதிய அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தலில் வெற்றி பெற்ற ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா, தனது தலைமையின் கீழ் அமையும் அரசின் முக்கிய பதவிகளுக்கான நபர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
அடுத்தாண்டு ஜனவரி 20ஆம் தேதி அந்நாட்டின் அதிபராக முறைப்படி பதவியேற்க உள்ள ஒபாமா, புதிய அரசின் அயலுறவு அமைச்சராக தனது கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியுமான ஹிலாரியை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியானது.
இந்நிலையில், புதிய அமைச்சரவையில், குடியரசுக் கட்சியை சேர்ந்த ஒரு சிலருக்கு இடம் அளிக்க முடிவு செய்திருப்பதாக ஒபாமா அறிவித்துள்ளார்.