Publish Date: Sat, 15 Nov 2008 (23:58 IST)
Updated Date: Sat, 15 Nov 2008 (23:58 IST)
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரின் மீது நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தியதாகவும், இதில் அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகளின் ஆதரவு இணைய தளமான புதினம் வெளியிட்டுள்ள செய்தி தெரிவிக்கிறது.
மேற்கண்ட சம்பவத்தை அடுத்து இன்று காலை தேடுதல் வேட்டைக்காக கூடுதல் அதிரடிப் படையினர் களமிறக்கப்பட்டதாகவும், இவர்களும் விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிகளில் சிக்கிக் கொண்டதாகவும், இதில் அதிரடிப் படையினர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், இருவர் காயமடைந்துள்ளதாகவும் புதினம் செய்தி தெரிவிக்கிறது.