Publish Date: Fri, 14 Nov 2008 (05:49 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (05:48 IST)
சிறிலங்காத் தலைநகர் கொழும்புவின் புறநகர்ப் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட வணிக வளாகம் ஒன்றில் இருந்து தற்கொலைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தப்படும் வெடிகுண்டு ஜாக்கெட் ஒன்றை கைப்பற்றியுள்ளதாக ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
வழக்கமான சோதனைப் பணிகளில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா படையினர் கொழும்புவின் புறநகர்ப் பகுதியான பங்களாவட்டே வட்டால என்ற இடத்தில் உள்ள கைவிடப்பட்ட வர்த்தக வளாகத்தில் இருந்து ஒரு கிலோ சி-4 வெடிமருந்து நிரப்பிய தற்கொலைத் தாக்குதலிற்குப் பயன்படுத்தப்படும் ஜாக்கெட்டை கண்டுபிடித்துக் கைப்பற்றியதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
குறிப்பிட்ட வணிக வளாகத்தின் மறைவான பகுதியில் உள்ள பரண் மீது வெடிகுண்டு ஜாக்கெட் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததாகவும், இது அநேகமாக விடுதலைப் புலிகளுடயதாக இருக்கலாம் என்றும் சிறிலங்கா ராணுவம் கூறியுள்ளது.
குறிப்பிட்ட வணிக வளாகத்தில் 26 கடைகள் உள்ளன. இந்த வளாகம் கைவிடப்பட்டுவிட்டதால் பாதுகாப்பு அடிப்படையில் ராணுவத்தினர் இதைக் கண்காணித்து வந்துள்ளனர்.
Webdunia
Publish Date: Fri, 14 Nov 2008 (05:49 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (05:48 IST)