Publish Date: Fri, 14 Nov 2008 (05:05 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (05:04 IST)
கிழக்கு ஆஃப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் ஒருவர் உள்பட 20க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.
ஆஃப்கானிஸ்தானில் பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள நன்கர்ஹர் மாகாணத்தின் தலைநகர் ஜலாலாபாத்தில் அமெரிக்கப் படையினரின் அணிவகுப்பைக் குறிவைத்து தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் ஒருவரும், பொது மக்கள் 19 பேரும் கொல்லப்பட்டுள்ளதுடன், 69 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைநதுள்ளனர் என்று அமெரிக்க ராணுவப் பேச்சாளர் தெரிவித்தார்.