ஜனநாயகம் கோரி கடந்தாண்டு நடந்த பேரணியில் பங்கேற்று, நீண்ட காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என மியான்மர் ராணுவ அரசுக்கு ஐ.நா. பொதுச் செயலர் பான்-கி-மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மியான்மரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று கடந்த காலத்தில் கோரிய பான்-கி-மூன், தற்போது மீண்டும் அதே காரணத்தை வலியுறுத்தியுள்ளார்.
கடந்த செப்டம்பர் 2007இல் மியான்மரில் ஜனநாயகத்தை நடைமுறைப்படுத்தக் கோரி அமைதியாக நடந்த பேரணியில் பங்கேற்ற பல்வேறு அரசியல் கட்சி அமைப்பினரை அந்நாட்டு ராணுவ அரசு நேர்மையற்ற நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசியல் கைதிகளாக சிறையில் அடைத்தது. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என உலகின் முன்னணி மனித உரிமை கண்காணிப்பு அமைப்பான ஐ.நா. சபை, மியான்மர் ராணுவ அரசிடம் நேற்று வலியுறுத்தி உள்ளது.