Publish Date: Thu, 13 Nov 2008 (11:47 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (11:47 IST)
ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகளை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் இருந்த அமெரிக்க ராணுவ நிலைகள் மீது இன்று நடத்தப்பட்ட இத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்றும், இதில் காயமடைந்த மேலும் 55 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.