Publish Date: Thu, 13 Nov 2008 (03:47 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (03:46 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணத்தில் ராணுவத்தினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைகளில் அமெரிக்கர் ஒருவர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வடமேற்கு மாகாணத் தலைநகர் பெஷாவரில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சாப்குவாடர் என்ற இடத்தில் துணை ராணுவத்தினரின் வாகன அணிவகுப்பின் மீது வெடி பொருட்கள் நிரப்பிய வாகனத்தை மோதி தீவிரவாதி ஒருவன் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் 3 படையினர் கொல்லப்பட்டனர்.
மேலும் 10 படையினர் காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் அருகில் உள்ள கன்டோன்மென்ட் ராணுவ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
டொட்டானோ பந்தா என்ற கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்கர் ஒருவர் கொல்லப்பட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
Webdunia
Publish Date: Thu, 13 Nov 2008 (03:47 IST)
Updated Date: Thu, 13 Nov 2008 (03:46 IST)