வாஷிங்டனில் இந்த வார இறுதியில் நடைபெற உள்ள ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் பான்-கி-மூன் உலக பொருளாதார நெருக்கடி காரணமாக வளரும் நாடுகள் பாதிக்காத வகையில் இருக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பேன் என கூறியுள்ளார்.
நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர், சர்வதேச பொருளாதார நெருக்கடி குறித்த விவாதிக்க அனைத்து தரப்பு யோசனைகளையும் வரவேற்கிறேன். இதில் நிதி நிறுவனங்களின் அடிப்படை கட்டமைப்பை சீரமைப்பதும் அடங்கும்.
ஆனால் தற்போதைய நிதி நெருக்கடி நிலை, வளரும் நாடுகளை மேலும் பாதிக்காமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளையும், அந்நாடுகளின் நலனை காப்பதுமே எனது முழு கவனமும் இருக்கும் இருக்கும் எனக் கூறினார்.
ஜி-20 மாநாட்டிற்கு இதுவரை எந்த ஐ.நா பொதுச் செயலருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்பதால், அம்மாநாட்டில் பங்கேற்கும் முதல் ஐ.நா பொதுச் செயலர் என்ற பெருமையை பான்-கி-மூன் விரைவில் பெற உள்ளார்.