Publish Date: Wed, 12 Nov 2008 (06:33 IST)
Updated Date: Wed, 12 Nov 2008 (06:33 IST)
சோமாலியா அருகில் 23 ஊழியர்களுடன் பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பல் ஒன்று கடத்தப்பட்டுள்ளது.
சரக்குகளுடன் ஆசியா கடல் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டுக் கப்பலை ஆடன் வளைகுடா பகுதியில் தானியங்கித் துப்பாக்கிகள், எரிகணைகளுடன் விசைப் படகுகளில் வந்த கொள்ளையர்கள் கடத்திச் சென்றுள்ளனர் என்று சர்வதேசக் கடல் போக்குவரத்துக் கழக அதிகாரி நியோல் சூங் தெரிவித்துள்ளார்.
சோமாலியா கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மிகுந்த கவனத்துடன் கூடுதல் பாதுகாப்பு அமைப்புகளுடன் செல்ல வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவித்த அவர், பிலிப்பைன்ஸ் கப்பல் குறித்த மேல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.