Publish Date: Tue, 11 Nov 2008 (10:38 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
மியான்மரின் மெய்டிலா என்ற பகுதிக்கு அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 7.50 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், பூமிக்கடியில் 35 கி.மீ ஆழத்தில் இது மையம் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் பெரியளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை என மியான்மர் நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.0 புள்ளிகளாகப் பதிவானதாக கூறப்பட்டுள்ளது.