Publish Date: Mon, 10 Nov 2008 (11:12 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கின்ஹாய் மாகாணத்தில் இன்று காலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.5 ஆக பதிவானது.
காலை 9.22 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 6.52) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், பூமிக்கடியில் 6.2 மைல் (10 கி.மீ) ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதை உறுதி செய்த சீன நிலநடுக்க மைய அதிகாரிகள் ரிக்டர் அளவில் அது 6.3 ஆகப் பதிவானதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து கின்ஹாய் மாகாண செய்தித் தொடர்பாளர் ஷாங் கூறுகையில், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து உள்ளூர் அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்து வருகிறோம் என்றார்.