Publish Date: Fri, 07 Nov 2008 (05:03 IST)
Updated Date: Fri, 07 Nov 2008 (05:02 IST)
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பராக் ஒபாமா, தனது ஆலோசகராக இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பொருளாதார வல்லுநர் சோனல் ஷாவை தேர்வு செய்துள்ளார்.
வெள்ளை மாளிகை ஆலோசகர்கள் குழுவில் சோனல் ஷா இடம்பெறுவார். கூகிள் நிறுவனத்தின் பிலந்த்ரோபிக் பிரிவிற்கு சோனல் தலைமை வகித்து வந்துள்ளார்.
40 வயதாகும் சோனல் ஷா, தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் ஆலோசனைக் குழுவில் இடம்பெற்று அனுபவம் பெற்றவர். இவர் ஒபாமாவின் வெள்ளை மாளிகை ஆலோசகர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டிருப்பதாக அமெரிக்க பத்திரிகை செய்திகள் தெரிவிக்கின்றன.