வன்னியில் இடம்பெயர்ந்துள்ள 20ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்குத் தற்காலிகமாகத் தங்குவதற்கான வசதிகள்கூட இன்னமும் கிடைக்கவில்லை என்று ஐ.நா. அவையின் அகதிகளுக்கான உயர் ஆணையகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த ஆணையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
வன்னியில் இடம்பெயர்ந்துள்ள மக்களில் பெரும்பாலானவர்கள் கூடாரங்களைத் தற்காலிகமாக அமைத்துத் தங்கியிருந்தாலும் அவை பாதுகாப்பானவை அல்ல. தற்காலிகமாகத் தங்குவதற்கான கூடாரங்கள் அமைப்பதற்கான பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
தற்காலிகத் தங்குமிடங்களை அரசு அமைத்துத் தருவதில் குறைகள் உள்ளன. 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு தற்காலிகத் தங்குமிட வசதிகள் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்கான கூடாரங்களை அமைக்கும் பொருட்களைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் முன்பு காத்திருக்கின்றனர். ஆனால் அந்த நிறுவனங்களிமும் போதுமான பொருட்கள் இல்லை.
இவ்வாறு ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.