Publish Date: Wed, 05 Nov 2008 (12:02 IST)
Updated Date: Wed, 05 Nov 2008 (12:01 IST)
அலாஸ்காவின் லியூடியன் தீவுப்பகுதியில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இந்திய நேரப்படி இன்று காலை 10.34 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கடலுக்கடியில் 36 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் லியூடியன் மற்றும் ஃபாக்ஸ் தீவுகளில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனினும், இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல்கள் வெளியாகவில்லை.