Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எனது வெற்றியால் அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளது: ஒபாமா!

எனது வெற்றியால் அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளது: ஒபாமா!
, புதன், 5 நவம்பர் 2008 (16:48 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் பெற்ற வெற்றியால் அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளதாக அந்நாட்டின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் பராக் ஒபாமா கூறியுள்ளார்.

அமெரிக்காவின் 44வது அதிபராக அந்நாட்டு மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒபாமா, தனது சொந்த ஊரான சிகாகோவில் வெற்றி உரையாற்றினார்.

அதில், அமெரிக்காவில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்பதில் சந்தேகம் உள்ள சிலருக்கும், ஜனநாயகத்தின் சக்தி மீது கேள்வி எழுப்பியவர்களுக்கும் இன்றைய தேர்தல் வெற்றி மூலம் நீங்கள் (மக்கள்) பதிலளித்துள்ளீர்கள்.

இது (தேர்தல் வெற்றி) அமெரிக்காவின் பல்வேறு பள்ளிகள், சர்சுகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்த மக்களின் பதிலாகும். இளையோர், முதியோர், ஏழை, பணக்காரன், ஹிஸ்பானிக், ஆசியர்கள், குடியரசு, ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அளித்த பதில் இது. இதன் மூலம் அமெரிக்கர்கள் உலகிற்கு ஒரு செய்தியை ஆணித்தரமாக உணர்த்தியுள்ளனர் என்றார்.

நீண்ட காலமாகி விட்டாலும், இன்று, இத்தேர்தலில் நாம் ஏற்படுத்திய தாக்கம் மூலம் அமெரிக்கா மாற்றம் பெற்றுள்ளது. இது உங்கள் (மக்கள்) வெற்றி என்றார்.

சற்று முன்னர் தனது சக போட்டியாளரான குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன் தன்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாகக் கூறிய ஒபாமா, இத்தேர்தலில் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என மிகக் கடுமையாக அவர் போராடியதாகவும், அவரது நீண்ட கால தியாகம் மிகுந்த தன்னலமற்ற உழைப்பிற்கு நாம் மதிப்பளிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் என்றும் மெக்கெய்னுக்கு ஒபாமா புகழாரம் சூட்டினார்.

பிடெனுக்கு பாராட்டு: இத்தேர்தலில் எனது அருமை நண்பர் ஜோ பிடென் துணை அதிபராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது உதவியின்றி இன்று நான் உங்கள் முன் வெற்றி உரையாற்றியிருக்க முடியாது. கடந்த 16 ஆண்டுகளாக அவர் எனது சிறந்த நண்பராக விளங்கியுள்ளார் என்பதை இத்தருணத்தில் கூறிக் கொள்கிறேன்.

அதேபோல் எனது தேர்தல் பிரசாரத்தை முன்னின்று வழிநடத்திச் சென்ற டேவிட் ப்ளாஃப் தலைமையிலான குழுவினருக்கும் நான் கடமைப்பட்டுள்ளேன். இத்தேர்தலின் நிஜமான நாயகன் என்றால் அது டேவிட் ப்ளாஃப் என ஒபாமா குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil