வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நடத்திவரும் போர் முடியும் தருவாயில் உள்ளதாக சிறிலங்கா ராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழீழ விடுதலைப் புலிகள் வசமிருந்த 80 விழுக்காடு நிலத்தைக் கைப்பற்றியுள்ளதுடன், அவர்களது 12,000 உறுப்பினர்களையும் கொன்றுள்ளதன் மூலம், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் 80 விழுக்காடு முடிந்துவிட்டது." என்று கூறியுள்ளார்.
"போர் துவங்கிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளிடன் 12,000 உறுப்பினர்கள் இல்லை என்றாலும், பின்னர் அவர்கள் நடத்தியுள்ள பெருமளவிலான ஆட்சேர்ப்பிற்குப் பிறகு கடந்த இரண்டரை ஆண்டுகளில் நடந்துள்ள மோதல்களில் மட்டும் 12,000 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்." என்றும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
முன்னதாக அவர் கொழும்புவில் இருந்து 212 கிலோ மீட்டர் தொலைவில் வடக்கில் உள்ள புத்த நகரமான அனுராதபுரத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.