Publish Date: Tue, 04 Nov 2008 (14:58 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (14:57 IST)
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு சோதனைச் சாவடியில் இன்று தற்கொலைத் தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர்.
வடமேற்கு எல்லைப்புற மாகணத்தில் உள்ள ஹங்கு மாவட்டத்தின் தூபா நகரில் ஏற்பட்ட கலவரத்தையடுத்து அண்மையில் அங்கு இந்த சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது.
இந்த தற்கொலைத் தாக்குதலில் 3 பாதுகாப்பு படையினர் உள்பட 7 பேர் காயமடைந்தனர் என்று இந்நிகழ்வை நேரில் பார்த்தவர்கள் கூறியதாக தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இத்தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத இயக்கமும் பொறுப்பேற்கவில்லை.