Publish Date: Tue, 04 Nov 2008 (10:49 IST)
Updated Date: Tue, 04 Nov 2008 (10:49 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் பராக் ஒபாமாவின் பாட்டி மடேலின் துன்ஹம், புற்றுநோய் தாக்குதல் காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 86.
இதுகுறித்து தனது தங்கை மாயா சோய்டோரோவுடன் இணைந்து ஒபாமா வெளியிட்டுள்ள செய்தியில், புற்றுநோயால் போராடிய எங்கள் பாட்டி, உறக்கத்திலேயே அமைதியாக உயிரிழந்தார் என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மாதம் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த நிலையிலும், பாட்டியின் உடல்நிலை மோசமடைந்ததால், கடந்த அக்டோபர் 23, 24ஆம் தேதிகளில் ஹவாய் தீவுக்கு சென்று அவரை ஒபாமா சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஒபாமாவுக்கு 10 வயதாக இருந்த போது அவரது தாய் இந்தோனேஷியாவில் பணியாற்றச் சென்றதால், பாட்டி மடேலின் அவரை வளர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.