இலங்கையில் மாங்குளம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நடந்த மோதலில் படையினர் 10 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
வன்னிவிளாங்குளத்திலிருந்து மாங்குளம் நோக்கி சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர எதிர்த் தாக்குதலை நடத்தியதாகவும், நேற்று பிற்பகல் 12.00 மணிக்குத் துவங்கிய இந்த மோதல் பிற்பகல் 5 மணி வரை நீடித்ததாகவும் புலிகள் ஆதரவு இணைய தளமான புதினத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தக் கடும் மோதலில் 10 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.