Newsworld News International 0811 04 1081104023_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஒபாமாவுக்கு 81% இந்தியர்கள் ஆதரவு: கருத்துக் கணிப்பு!

Advertiesment
வாஷிங்டன் அமெரிக்க அதிபர் தேர்தல் பராக் ஒபாமா ஜோ பிடென் ஜான் மெக்கெய்ன் சாரா பாலின்
, செவ்வாய், 4 நவம்பர் 2008 (10:04 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பராக் ஒபாமாவுக்கு, அமெரிக்க வாழ் இந்தியர்களில் 81 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

PTI PhotoFILE
அமெரிக்க அதிபர் தேர்தலில் எந்தக் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பீர்கள் என்ற கேள்வியுடன் அமெரிக்க வாழ் இந்தியர்களிடம், வாஷிங்டனைச் சேர்ந்த கட்சி சாராத நிறுவனம் சார்பில் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இதில் ஜனநாயகக் கட்சி அதிபர் வேட்பாளர் ஒபாமா, துணை அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் ஆகியோருக்கு 81 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளர் ஜான் மெக்கெய்ன், துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலின் ஆகியோருக்கு 19 விழுக்காடு இந்தியர்களின் ஆதரவே கிடைத்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (4ஆம் தேதி) நடைபெற உள்ள நிலையில், இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது ஒபாமாவுக்கு அமெரிக்க மக்களிடையே உள்ள ஆதரவை மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil