Publish Date: Sat, 01 Nov 2008 (13:58 IST)
Updated Date: Sat, 01 Nov 2008 (13:57 IST)
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறி வாழும் இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த 2007ஆம் ஆண்டில் 81 விழுக்காடு அதிகரித்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்து வருவோரின் எண்ணிக்கை தொடர்ந்து முன்னணியில் இருப்பதாகவும் அமெரிக்க புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
கடந்த 2000ஆவது ஆண்டில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தது, 2007ஆம் ஆண்டில் 2 லட்சத்து 20 ஆயிரமாக உயர்ந்திருப்பதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது.