Publish Date: Thu, 30 Oct 2008 (12:01 IST)
Updated Date: Thu, 30 Oct 2008 (11:58 IST)
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இந்திய மக்களின் சார்பில் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானிக்கு, மன்மோகன் எழுதியுள்ள கடிதத்தில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், வீடுகளை இழந்து தவிப்பவர்களுக்கும் இந்திய மக்களின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
மேலும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான எந்த உதவியையும் இந்திய அரசு செய்து தரத் தயாராக உள்ளதாகவும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானின் தென்மேற்குப் பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் கடந்த புதனன்று அதிகாலை ஏற்பட்ட அடுத்த நிலநடுக்கத்தால் 15 ஆயிரம் பேர் வீடுகளை இழந்தனர். இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 170 ஆக அதிகரித்துள்ளது.