Publish Date: Wed, 29 Oct 2008 (10:44 IST)
Updated Date: Wed, 29 Oct 2008 (10:44 IST)
தென்மேற்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது 80 பேர் பலியாகியுள்ளதாக அரசுத் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.
தென்மேஏற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் இந்த நிலநடுக்கம் இன்று அதிகாலையில் ஏற்பட்டுள்ளது. யு.எஸ்.புவியியல் ஆய்வு மைய அறிக்கையின் படி இது ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியுள்ளது.
பூமிக்கு அடியில் 15 கி.மீ அழத்திலேயே இந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
குறைந்தது 500 வீடுகளாவது சேதமடைந்திருக்கலாம் என்று அரசு தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.