Publish Date: Tue, 28 Oct 2008 (23:00 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (23:00 IST)
துபாயில் கட்டடம் இடிந்து விழுந்து இரண்டு இந்தியர் உள்பட மூன்று பேர் பலியானார்கள்.
பஹ்ரைனில் உள்ள மஹூஸ் என்ற இடத்தில் ஒரு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக சாரம் அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது சாரம் சரிந்து விழுந்ததில், இந்தியாவைச் சேர்ந்த அனில் குமார் (33), பந்தள ராஜு (33) ஆகியோர் உட்பட 3 தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பலியானார்கள். பலியான மற்றொருவர், வங்கதேசத்தை சேர்ந்தவர். இந்த விபத்தில் குல்தீப் சிங் என்ற இந்தியர் படுகாயம் அடைந்தார்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த தொழிலாளர் அமைச்சக அதிகாரிகள், கட்டுமானப் பகுதிக்கு உடனடியாக `சீல்' வைத்தனர். கட்டுமானப் பணிகளுக்கான சாரம் உள்ளிட்டவற்றையும் அப்புறப்படுத்தினர். இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.