இந்தியாவில் கிறிஸ்துவர்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து கவலை தெரிவித்துள்ள வாடிகன் நிர்வாகம், மகாத்மா காந்தியின் உதாரணத்தை பின்பற்றி, இந்துக்கள் அகிம்சை வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று போப் ஆண்டவரின் வாடிகன் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக வாடிகன் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து மதத்தினரும் ஒருவருடன் ஒருவர் சேர்ந்து வாழ வேண்டும் என்றும் இந்து பாரம்பரியம் கற்பித்த உபதேசங்களில் அகிம்சை முக்கியமானது என்றும் கூறியுள்ளது.
மகாத்மா காந்தி, தனது விடுதலைப் போராட்ட காலத்தில், 'கண்ணுக்கு கண் என்று செயல்பட்டால், விரைவில் எல்லோரும் குருடர் ஆகி விடுவார்கள்' என்று கூறினார் என தெரிவித்துள்ள வாடிகன் நிர்வாகம், காந்தியின் உதாரணத்தை பின்பற்றி, இந்துக்கள் அகிம்சை வழிமுறையை கடைபிடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.