Publish Date: Tue, 28 Oct 2008 (15:33 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (15:33 IST)
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டு எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் எல்லைப்படையினர் மீண்டும் இந்திய நிலைகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்திய - பாக். எல்லைப் பாதுகாப்புப் படைத் தலைவர்கள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீற மாட்டோம் என்று உறுதியளித்து இன்னமும் 15 நாட்கள் கூட ஆகாத நிலையில், இத்தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக மூத்த இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று இரவு 11.45 மணியளவில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும், இது சுமார் அரை மணி நேரம் நீடித்ததாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார்.
ஆனால் இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் எதிர்த் தாக்குதல் நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Webdunia
Publish Date: Tue, 28 Oct 2008 (15:33 IST)
Updated Date: Tue, 28 Oct 2008 (15:33 IST)