Publish Date: Wed, 22 Oct 2008 (13:52 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (13:52 IST)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் மீது விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் ஒருவர் காயமடைந்தார்.
பொத்துவில் வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிலங்க சிறப்பு அதிரடிப்படையினர் மீது நேற்று விடுதலைப் புலிகள் அதிரடித் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் சிறிலங்க அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.