Publish Date: Wed, 22 Oct 2008 (12:59 IST)
Updated Date: Wed, 22 Oct 2008 (12:58 IST)
கொழும்பு: யாழ்ப்பாணம் காங்கேசன்துறை கடற்பரப்பில் சிறிலங்காவின் 2 சரக்குக் கப்பல்களை இலக்கு வைத்து விடுதலைப்புலிகள் இன்று அதிகாலை தற்கொலைத் தாக்குதல் நடத்தினர்.
காங்கேசன்துறை மயிலிட்டி கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல்களான 'ருகுண', 'நிமலவ' ஆகியவற்றினை இலக்கு வைத்து இன்று அதிகாலை 5.10 மணியளவில் விடுதலைப் புலிகளின் மூன்று தற்கொலைப் படகுகள் தாக்குதல் நடத்தின.
இதில் ஒரு கப்பலுக்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளது. மற்ற கப்பலுக்கு எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை என்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் முயற்சியினை முடியடித்துள்ளோம் என்றும் சிறிலங்கா கடற்படை செய்தித்தொடர்பாளர் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்துள்ளார்.
எனினும், இந்த தாக்குதல் குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் அதிகாரபூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.