மத்திய இந்தோனேஷியாவில் இன்று கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 6 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது..
இந்த நிலநடுக்கத்தால், குடியிருப்புகள் குலுங்கியதாகவும், இதனால் அச்சமுற்ற மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி அலறியடித்தப்படி சாலைகளுக்கு ஓடிவந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், உயிர்ச்சேதம், பொருட்சேதம் ஏற்பட்டதாக உடனடியாக தகவல் எதுவும் இல்லை.
கடலுக்கடியில் 105 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், சுலாவேசி தீவின் கடற்கரை நகரான பாலு என்ற இடத்திலிருந்து வடகிழக்கே 145 கி.மீ. தொலையில் மையம் கொண்டிருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.