Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தனித்தன்மை வாய்ந்தது: யு.எஸ்!

இந்தியாவுடனான அணு சக்தி ஒப்பந்தம் தனித்தன்மை வாய்ந்தது: யு.எஸ்!
, சனி, 18 அக்டோபர் 2008 (12:10 IST)
இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தனித்தன்மை வாய்ந்தது என்பதால், பிற நாடுகளுடன் அது போன்றதொரு ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியாது என அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய தெற்கு, மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க துணை அமைச்சர் ரிச்சர்ட் பவுச்சர், பாகிஸ்தானின் வளர்ந்து வரும் எரிசக்தித் தேவையை மேம்படுத்த அமெரிக்கா துணைபுரியும் என்றாலும், அதற்காக இந்தியாவுடன் மேற்கொண்டதைப் போன்ற ஒரு அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை பாகிஸ்தானுடன் அமெரிக்கா மேற்கொள்ளாது என்றார்.

பாகிஸ்தானுடைய எரிசக்தி தேவையை மேம்படுத்துவதில் அமெரிக்காவுக்கு கடமை உண்டு. அந்நாட்டு அயலுறவு அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையின் போது எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்துவது குறித்தும், அதற்காக மேற்கொள்ள வேண்டிய கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் அமெரிக்கா விவாதித்ததாக அவர் தெரிவித்தார்.

எனவே, பாகிஸ்தானின் எரிசக்தி உற்பத்தியை மேம்படுத்த அமெரிக்கா உதவும் என்றும், இவ்‌‌விடயத்தில் அமெரிக்கா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்படுவதுடன், அந்நாட்டுடனான கூட்டு நடவடிக்கைகளும் மேம்படுத்தப்படும் என்று ரிச்சர்ட் பவுச்சர் குறிப்பிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil