வாஷிங்டன்: ஆறு ஐரோப்பிய நாடுகளுடன் தென் கொரியாவிற்கும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் விசா சலுகை அறிவித்துள்ளார்.
லாட்வியா, லிதுவேனியா, ஈஸ்டோனியா, ஹங்கேரி, செக்.குடியரசு, ஸ்லோவேகியா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளும் அமெரிக்க விசா சலுகைத் திட்டங்களின் கீழ் சேர்க்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் நேற்று அறிவித்தார்.
இந்த நாடுகள் ஏற்கனவே அமெரிக்க குடிமக்களை விசா இல்லாமல் தங்கள் நாடுகளுக்கு வருகை தர அனுமதித்து வருகிறது.
பிற நாடுகளும் இந்த விசா சலுகை திட்டத்தின் கீழ் வருவதாக அறிவித்துள்ள புஷ், இதற்காக இந்த நாடுகள், மோசடி செய்ய முடியாத, ஆள்மாறாட்டம் செய்ய முடியாதபடி பயோ-மெட்ரிக் பாஸ்போர்ட்டுகளை வழங்குமாறு அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது.