Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜி-8 நாடுகள் நிதி உச்சி மாநாடு!

ஜி-8 நாடுகள் நிதி உச்சி மாநாடு!
, வியாழன், 16 அக்டோபர் 2008 (10:30 IST)
ஜி-8 நாடுகள் என்று அழைக்கப்படும் உலகின் 8 பணக்கார நாடுகள் பொருளாதார நெருக்கடிகளை தடுப்பதற்கான உச்சி மாநாட்டினை வரும் நவம்பரில் நடத்த முடிவு செய்துள்ளன.

இந்த உச்சி மாநாடு நியூயார்க் நகரில் நடைபெறலாம் என்று தெரிகிறது.

சர்வதேச நிதியம் (ஐ.எம்.எஃப்), மற்றும் உலக வங்கி ஆகியவற்றை வேறு வகையில் மறு அமைப்பாக்கம் செய்ய பிரிட்டன் அழைப்பு விடுத்துள்ளது. பிரான்ஸ் அதிபர் சர்கோஸி இந்த உச்சி மாநாடு, நிதி நெருக்கடிகள் எங்கு தோன்றியதோ, அதாவது அது தோன்றிய நியூயார்க்கில் நடைபெறவேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது இந்த மாநாடு ஒரு "புதிய முதலாளித்துவத்திற்கு" இட்டுச் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

1940 ஆம் ஆண்டுகளில் ஐ.நா-வையும் பிரெட்டன் வுட்ஸ் மாநாட்டையும் உருவாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க ஒரு தொலை நோக்குப்பார்வையை இந்த மாநாடு உருவாக்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் வளரும் பொருளாதார நாடுகளான சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளும் பங்கேற்க வேண்டும் என்று பிரிட்டன் பிரதமர் பிரவுன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இன்று வெள்ளை மாளிகையில் இந்த மாநாடு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. அதாவது இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதில் ஒற்றுமை காப்போம் என்றும் இந்த சவால்களை சந்தித்து மீண்டும் தங்களது பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு திரும்புவோம் என்றும் அந்த அறிக்கையில் ஜி-8 நாடுகளின் தலைவர்கள் கூறியுள்ளனர்.

தற்போது அமெரிக்கா நிதி நெருக்கடிகளை சமாளிக்க எடுத்து வரும் நடவடிக்கைகள் உடனடியான நோய்க்கூறுகளைக் களைய எடுக்கப்படுகிறது நோயின் அடிப்படை வேர்களை தாக்குவதாக இது ஆகாது என்று பிரான்ஸ் அதிபர் சர்கோஸி கூறியுள்ளார்.

"நாம், நிறுவனங்கள் மற்றும் குடிமக்களின் கீழ் நிதியை கொண்டு வரவேண்டும், மாறாக குடிமக்களை நிதியின் கீழ் கொண்டு வரக்கூடாது என்கிற புதிய மதிப்பீடுகளுடன் கூடிய புதிய முதலாளித்துவத்தை கண்டுபிடிக்க வேண்டும்" என்றார் சர்கோஸி.

தற்போதைய அமெரிக்க நெருக்கடி சுமார் ஓராண்டுக்கு முன்பு ஏற்படத் துவங்கியது. சப் பிரைம் கடன் திருவிழாதான் இதன் ஆரம்பம் என்று கூறிய பிரிட்டன் பிரதமர். இன்னொரு முறை இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க அனைத்து நாடுகளுக்குமான பொது நிதியத்தை முறையான கட்டுப்பாட்டு விதிகளுடன் துவங்கவேண்டும் என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil