Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்!

கிரீஸ் நாட்டில் கடும் நிலநடுக்கம்!
, செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:36 IST)
கிரீஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதியில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர்‌‌ச்சேதமோ, பொருட் சேதமோ எதுவு‌ம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் (இந்திய நேரப்படி காலை 7.47) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், இவியா தீவுக்கும், ஹல்கிடா பகுதிக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் மையம் கொண்டதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கடும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்த சில நிமிடங்களில், 2 மிதமான நிலநடுக்கங்களும் அப்பகுதியில் பதிவானதாகவும், இதன் தாக்க‌ம் அந்நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் வரை உணரப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆகப் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil