இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.
இன்று அதிகாலை 1.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், மலுகு மாகாணத்தின் டெர்னேட் பகுதியில் இருந்து 131 கி.மீ தொலைவில் மையம் கொண்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் 30 நிமிடங்கள் கழித்து, சுமத்ரா மாகாணத்தின் மென்டாவாய் பகுதியில் இருந்து 376 கி.மீ. தொலைவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கடியில் 134 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும் அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.