இலங்கையில் சிங்கள அரசு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையைக் கண்டித்து ஜெர்மனி வாழ் தமிழர்கள் கவன ஈர்ப்புப் பேரணி நடத்தினர்.பெர்லின் நகரின் மையத்தில் உள்ள அலெக்ஸ்சாண்டா பிளட்ஸ் என்ற இடத்தில் துவங்கிய இந்தப் பேரணி ஜக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான தலைமைச் செயலகம் முன்பு நிறைவடைந்தது.
இந்தப் பேரணியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பங்கேற்றதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
- வன்னியில் செயல்பட்டு வந்த தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை சிறிலங்கா அரசு வெளியேற்றியதைக் கண்டித்தும்
- வன்னியில் விமானத் தாக்குதல், எறிகணைத் தாக்குதல் ஆகியவற்றால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும்
- இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்கான உதவிகளை தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மீண்டும் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்பட்டுள்ளது என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.