Publish Date: Tue, 07 Oct 2008 (21:25 IST)
Updated Date: Tue, 07 Oct 2008 (21:25 IST)
கிளிநொச்சியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.
திருமுறிகண்டி - அக்கராயன் வீதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது இன்று காலை சிறிலங்கப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இதற்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய கடும் எதிர்த் தாக்குதலில் 20க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டதுடன் பெருமளவிலான படையினர் படுகாயமடைந்துள்ளதாக புதினம் இணைய தளம் தெரிவிக்கிறது.
இதற்கிடையில், வன்னிவிளாங்குளம் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலைகளின் மீது சிறிலங்கா படையினர் தாக்குதல் நடத்தினர். இதற்கெதிராக விடுதலைப் புலிகள் நடத்திய எதிர்த் தாக்குதலையடுத்து படையினர் பழைய நிலைகளுக்கு விரட்டியடிக்கப்பட்டனர் என்றும் அந்தச் செய்தி கூறுகிறது.