இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செப்டம்பர் மாதத்தில் நடந்த மோதல்களில் மட்டும் 200 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,000 படையினர் காயமடைந்துள்ளதாக சிறிலங்கப் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அமல்படுத்தப்பட்டுள்ள நெருக்கடி நிலைப் பிரகடனத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தின்போது பதிலளித்த பிரதமர், இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார் என்று செய்திகள் கூறுகின்றன.
மேலும், இதே காலகட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த மோதல்களில் பொது மக்கள் 13 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளதாகவும் சிறிலங்கப் பிரதமர் ரட்னசிறீ விக்கிரமநாயக தெரிவித்துள்ளார்.