Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!

மருத்துவம்: 3 விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு!
, திங்கள், 6 அக்டோபர் 2008 (20:29 IST)
மனித இனத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 2 நோய்களுக்கு காரணமான வைரஸ் கிருமிகளைக் கண்டறிந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில் கர்ப்பப்பை புற்றுநோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட கூற்றுகளை உடைத்து தெரியும் வகையில், ஆன்கோஜெனிக் ஹுமன் பபிலோமா வைரஸ் (oncogenic human papilloma virus-HPV) என்ற நோய்க் கிருமிதான் அதற்கு முழுக் காரணம் என ஜெர்மன் விஞ்ஞானி ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் (Harald zur Hausen) கண்டறிந்தார். இதற்காக 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுத் தொகையில் 50 விழுக்காடு அவருக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் தற்போதைய சூழலில் உலகின் மிகக் கொடிய ஆட்கொல்லி நோயாக கருதப்படும் எய்ட்ஸ் நோய்க்கு காரணமான நோய்க் கிருமியை கண்டறிந்த விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகியோருக்கு நோபல் பரிசுத் தொலையில் தலா 25 விழுக்காடு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

webdunia photoFILE
ஹெச்.ஐ.வி. கண்டுபிடிப்பு: கடந்த 1981இல் மனித உயிர்களை பலி கொள்ளும் புதிய ரக நோய் குறித்து தகவலறிந்ததும், அதற்கு மூலக் காரணமான கிருமியை கண்டறியும் பணியில் பிரான்ஸ் விஞ்ஞானிகளான ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் ஆகிய இருவரும் ஈடுபட்டனர்.

webdunia
webdunia photoFILE
இதற்காக எய்ட்ஸ் நோயின் ஆரம்பகட்ட நிலையில் உள்ள நோயாளிகளின் உடலில் இருந்து பாதிக்கப்பட்ட திசுக்களை எடுத்து ஆய்வு மேற்கொண்டனர். அதில், ஒரு நோய்க்கிருமி தொடர்ந்து பன்மடங்காகப் பெருகி, செம்மையான உயிரணுக்களையும் தொடர்ந்து பாதிப்பதுடன் அவற்றையும் நோய்க் கிருமியாக மாற்றி வருவதை அவர்கள் ஆய்வில் கண்டறிந்தனர்.

இந்நோய்க்கு காரணம் எனக் கூறப்பட்ட ஆன்கோஜெனிக் ரெட்டிரோ வைரஸ் என்ற நோய்க்கிருமியின் தன்மையும், விஞ்ஞானிகள் ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியர் கண்டறிந்த நோய்கிருமியின் தன்மையும் முற்றிலும் வேறு மாதிரியாக இருந்தது. தொடர் ஆய்வில் எய்ட்ஸ் நோய்க்கு காரணமானது அவர்கள் புதிதாக கண்டறிந்த நோய்க்கிருமி என்பதும் உறுதி செய்யப்பட்டு அதற்கு ஹெச்.ஐ.வி. (human immunodeficiency virus-HIV) எனப் பெயரிடப்பட்டது.

ஹுமன் பபிலோமா வைரஸ்: கடந்த 1970களில் கர்ப்பப்பைப் புற்றுநோய்க்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட காலத்தில், ஹுமன் பபிலோமா வைரசுக்கும், கர்ப்பப்பை புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என்ற கோணத்தில் ஹெரால்ட் ஜுர் ஹவ்சன் தனது ஆய்வைத் துவக்கினார்.

webdunia
webdunia photoFILE
கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களில், ஆன்கோஜெனிக் வைரஸ் இருந்தால் அது அவர்களுடைய ஒவ்வொரு உயிரணுவிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்தார். இதுபோன்ற வைரஸ் உடைய டி.என்.ஏ.-க்களை கண்டறிய கட்டிகளை உண்டாக்கும் உயிரணுக்களை அவர் தேடத் துவங்கினார்.

சுமார் 10 ஆண்டு காலம் இந்த ஆய்வில் ஈடுபட்டதன் பயனாக கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளானவர்களிடம் அந்த டி.என்.ஏ. (ஹுமன் பபிலோமா வைரஸ் டி.என்.ஏ.) இருப்பதைக் கடந்த 1983இல் ஹெரால்ட் கண்டுபிடித்த. பின்னர் 1984இல் தான் கண்டுபிடித்த HPV16 ரக வைரஸைக் கொண்டு HPV18 ரக வைரஸை அவர் உருவாக்கினார்.

தற்போது கர்ப்பப்பை புற்றுநோய்க்கு உள்ளாகும் 70 சதவீதம் பெண்களில் உடலில் HPV16 மற்றும் HPV18 வைரஸ்கள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil