Newsworld News International 0810 06 1081006062_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஹெச்.ஐ.வி. வைரஸை கண்டுபிடித்த விஞ்ஞானிகளுக்கு நோபல்!

Advertiesment
ஸ்டாக்ஹோம் மருத்துவத் துறை எய்ட்ஸ் கர்ப்பப்பை புற்றுநோய் Harald zur Hausen AIDS HIV Montagnier BarreSinoussi
, திங்கள், 6 அக்டோபர் 2008 (17:16 IST)
மருத்துவத் துறைக்கு சிறந்த பங்களிப்பு, கண்டுபிடிப்பு மேற்கொண்டதற்காக 2008ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஜெ‌ர்ம‌‌னி, ‌பிரா‌ன்‌ஸ் ஆ‌கிய நாடுகளை சே‌ர்‌ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

நோபல் பரிசு அறிவிப்புக் குழுவின் சார்பில் சற்றுமுன் வெளியிடப்பட்ட செய்தியில், எய்ட்ஸ் நோய்க்கு காரணமான ஹெச்.ஐ.வி. வைரஸைக் கண்டுபிடித்த பிரான்ஸ் விஞ்ஞானிகளான ப்ரான்கோய்ஸ் பேரி-சினோவ்ஸி, லுக் மான்டெக்னியருக்கும், க‌ர்‌ப்பப்பை புற்றுநோய்க்கு காரணமான வைரஸைக் கண்டுபிடித்த ஜெர்மன் விஞ்ஞானி ஹரால்ட் ஜுர் ஹவ்சனுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதில் பெண்கள் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் க‌ர்‌ப்பப்பை புற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸை கண்டறிந்த விஞ்ஞானி ஹரால்ட் கடந்த 1936ஆம் ஆண்டு பிறந்தவர். ஜெர்மனியின் ஹெய்டல்பெர்க் நகரில் செயல்படும் ஜெர்மனி புற்றுநோய் ஆய்வு மையத்தில் பணியாற்றி வருகிறார்.

ஹெச்.ஐ.வி. வைரஸை கண்டறிந்த சினோவ்ஸி கடந்த 1947இல் பிறந்தவர். பாரீஸில் உள்ள பாஸ்டியர் இன்ஸ்டிடியூட்டின் வைரஸ் ஆய்வுப் பிரிவில் பணியாற்றி வருகிறார். மற்றொரு விஞ்ஞானியான மான்டெக்னியர் பாரீஸில் உள்ள சர்வதேச எய்ட்ஸ் ஆய்வு மற்றும் தடுப்பு மையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 1932இல் பிறந்தவர்.

Share this Story:

Follow Webdunia tamil