இலங்கையின் வடமத்திய மாகாணமான அனுராதபுரத்தில் இன்று காலை நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் சிறிலங்க இராணுவத்தின் முன்னாள் தளபதி, அவருடைய மனைவி உட்பட 27 பேர் கொல்லப்பட்டனர்.
அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் அலுவலகத் திறப்பு விழா இன்று காலை நடைபெற்றது. அப்போது இந்த தற்கொலைத் தாக்குதல் நடந்ததாகவும், அதில் முன்னாள் தளபதி ஜனக பெரேரா,அவருடைய மனைவி, அக்கட்சியின் மேலாளர் ஜான் புல்லே, அவரது மனைவி உள்ளிட்ட 27 பேர் உரியிழந்ததாகவும், மேலும் 35 பேர் காயமுற்றதாகவும் சிறிலங்க இராணுவ பேச்சாளர் உதய நானயக்காரா கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக பல இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டவர் பெரேரா என்பதால் அவரைக் குறிவைத்து விடுதலைப் புலிகள் இத்தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.