இராக்கில் ரமலான் தொழுகையின்போது மசூதி அருகே பயங்கரவாதிகள் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல், துப்பாக்கிச் சூடு ஆகியவற்றில் 22பேர் கொல்லப்பட்டதுடன் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
தலைநகர் பாக்தாத் அருகில் உள்ள ஷித்தி என்ற மசூதியில் இன்று அதிகாலையில் ரமலான் தொழுகை நடந்தது. அப்போது அங்கு வந்த பயங்கரவாதிகள் தங்களிடமிருந்த வெடிகுண்டை மசூதி அருகில் வெடிக்கச்செய்தனர்.
இதில் 16 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 100க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில், பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவியவர்களின் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர்.