Publish Date: Mon, 29 Sep 2008 (13:52 IST)
Updated Date: Mon, 29 Sep 2008 (13:44 IST)
பாக்தாத் நகரின் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளில் குறைந்தது 33 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய ரமலான் நோன்பு முடிவடையும் நேரத்தில் மசூதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் அடுத்தடுத்து நடத்தப்பட்டதாகவும், இதில் ஸ்ருதா பகுதி அருகே உள்ள ஷித்தி மசூதியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 35க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதேபோல் அந்நாட்டின் கர்ரடா மாவட்டத்தில் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார் வெடித்துச் சிதறியதில் 19 பேர் உயிரிழந்தனர். இதில் 72 பேர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மொத்தம் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் பலியான 33 பேரில், 3 பெண்களும், 3 காவல்துறையினரும் அடங்குவர்.