Publish Date: Fri, 26 Sep 2008 (15:45 IST)
Updated Date: Fri, 26 Sep 2008 (14:56 IST)
பாகிஸ்தானின் முக்கிய நகரமான கராச்சியில் தீவிரவாதிகளுக்கும், காவல் துறையினருக்கும் இடையே இன்று நடந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
பால்டியா பகுதியில் உள்ள ஒரு மயானத்தில் தீவிரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து காவல் துறையினர் அங்கு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த தீவிரவாதிகள் காவல் துறையினரை நோக்கி சரமாரியாக சுட்டதோடு கையெறி குண்டுகளையும் வீசினர்.
இதையடுத்து காவல் துறையினரும் எதிர்த்தாக்குதலில் ஈடுபட்டனர். பல மணி நேரமாக நீடித்த இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 3 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் மறைமுகமான ஒரு இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்கள் எந்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் உடனடியாக கிடைக்கவிலலை. காவல் துறையினர் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.